Skip to content Skip to sidebar Skip to footer

இந்தியா- பாக் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சண்டை: பீதியில் மக்கள் kashmir terror attack |gunfight

#Partnership 2019ம் ஆண்டில் 307 வது பிரிவை
மத்திய அரசு ரத்து செய்த பிறகு
காஷ்மீரில் சுற்றுலா துறை
அபரிமிதமான அளவுக்கு
வளர்ச்சியை கண்டது.

பஹல்காமில் கடந்த 22ம் தேதி
யாருமே எதிர்பாராத கொடூரமான
தாக்குதலை லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய பிறகு
நிலைமை தலைகீழாகி விட்டது..

பயங்கரவாதிகளை தூண்டி விடும்
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக
பலவித அதிரடி நடவடிக்கைளை
இந்தியா எடுத்து வருகிறது.

பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வேலைகளை முழுவீச்சில் மத்திய அரசு துவங்கியுள்ளதால்,
இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே,
ஜம்மு காஷ்மீர் எல்லையில்
பாகிஸ்தான் ராணுவம்
வீரர்களை குவித்து வருகிறது.

இந்திய ராணுவ தளபதி
உபேந்திர திவேதி காஷ்மீர்
சென்று நிலவரத்தை ஆராய்ந்தார்.
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்தும்,
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்
ராணுவ உயரதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார்.#kashmir terror attack |gunfight

Leave a comment

0.0/5

Subscribe for the updates!